முகப்பு
இந்தியா

கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு பாஜக எதிர்ப்பு: முதல்வர், துணை முதல்வர் புறக்கணிப்பு

கர்நாடகாவில் இன்று திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், விழாவை முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வரும் புறக்கணித்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:


பெங்களூரு: கர்நாடகாவில் இன்று திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், விழாவை முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வரும் புறக்கணித்துள்ளனர்.

திப்பு சுல்தானின் பிறந்ததினத்தை திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால், இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களையும் நடத்தியது.

இந்த நிலையில், திப்பு ஜெயந்தி விழாவுக்கு முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வராவும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக விழாவில் பங்கேற்கவில்லை என்று குமாரசாமி தரப்பிலும், ஊரிலேயே இல்லை என்று பரமேஸ்வரா தரப்பிலும் விளக்கம் கூறப்படுகிறது.

ஆளும் கூட்டணிக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பூசல் மற்றும் திப்பு சுல்தானின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில் ஏற்பட்ட கருத்து மோதல்களுமே, முதல்வரும், துணை முதல்வருமே நிகழ்ச்சியை புறக்கணிக்கக் காரணம் என்கிறது தகவல் அறிந்த வட்டாரங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.