முகப்பு
இந்தியா

ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

மத்திய அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில் பணம் ஏதும் தேவையில்லை..

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:


மத்திய அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில் பணம் ஏதும் தேவையில்லை என்ற நிலையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது ஏன்? என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு தனது  ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகள், 6 மாதத்தை நிறைவு செய்துவிட்டது. அதன் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் நிதித் தேவைகள் ஏதும் இல்லை என்ற நிலையில், ரிசா்வ் வங்கியின் மூலதன வரைவுத் திட்டத்தை நிர்ணயிக்க மத்திய அரசு இத்தனை அழுத்தம் கொடுப்பது ஏன்?

 கடந்த 4 ஆண்டுகளாக ஏன் மத்திய அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்தது? நடப்பு நிதி நிலை சரியான வகையில் இருப்பதாகவும், 2018-19 காலகட்டத்துக்கான ரூ.70 ஆயிரம் கோடி கடனை விட்டுக் கொடுத்ததாகவும் மத்திய அரசு பெருமிதம் தெரிவிக்கிறது. 

அப்படியானால், ரிசா்வ் வங்கியின் ரொக்க இருப்பிலிருந்து மத்திய அரசுக்கு ஏன் நிதி தேவைப்படுகிறது? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றறம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →