இந்தியா

கூடுதலாக ஒரு கோப்பை ஒயினுக்காக ஏர் இந்தியா ஊழியருடன் சண்டையிட்ட வெளிநாட்டுப் பெண் (விடியோ இணைப்பு) 

விமானத்தில் கூடுதலாக ஒரு கோப்பை ஒயின் கொடுக்காததால் ஏர் இந்தியா ஊழியருடன் அயர்லாந்து பெண் ஒருவர் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ANI

மும்பை: விமானத்தில் கூடுதலாக ஒரு கோப்பை ஒயின் கொடுக்காததால் ஏர் இந்தியா ஊழியருடன் அயர்லாந்து பெண் ஒருவர் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த விமானத்தில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சர்வதேச கிரிமினல் வழக்கறிஞர் ஒருவாறு  பயணம் செய்திருக்கிறார். வழக்கமாக சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி அந்த பெண் வழக்கறிஞர் விமான நிறுவன பெண் ஊழியரிடம்  ஓயின் (திராட்சை ரசம்) கேட்டுள்ளார். அவருக்கு அனைவருக்கும் வழங்கப்படும் அளவில் மது வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் அந்தப் பெண் கூடுதலாக ஒரு கோப்பை மது கேட்டுள்ளார். அதனை ஏர் இந்தியா நிறுவன ஊழியர் மறுக்கவே, அந்தப் பெண் ஒழியர்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் சரளமாக கெட்ட வார்த்தைகளையும் அவதூறுகளையும் ஊழியர்களை நோக்கி வாரி இறைத்துள்ளார். அத்துடன் கோபத்துடன் பெண்ணைத் தாக்க முயன்றவரை, ஆண் ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.    

அப்போது எடுக்கப்பட்ட விடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆனால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் இருந்து அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

விடியோ: நன்றி- டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

ஜீவாவின் புதிய படப்பெயர்!

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

SCROLL FOR NEXT