முகப்பு
இந்தியா

செருப்பு மாலை போட்ட வாலிபருடன் சண்டையிட்ட பாஜக எம்.எல்.ஏ (வைரல் விடியோ 

மத்திய பிரதேசத்தில் தனக்கு செருப்பு மாலை போட்ட வாலிபருடன் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சண்டையிட்டது தொடர்பான விடியோ வைரலாகப் பரவி வருகிறது  

Updated On : 20 நவம்பர், 2018 at 5:05 PM
பகிர்:

நகாடா: மத்திய பிரதேசத்தில் தனக்கு செருப்பு மாலை போட்ட வாலிபருடன் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சண்டையிட்டது தொடர்பான விடியோ வைரலாகப் பரவி வருகிறது  

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் கட்சிகள் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகாடா தொகுதி பாஜக எம்.எல்.ஏவான திலிப் ஷெகாவத், திங்களன்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவருக்குஅருகில் வந்த வாலிபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஷெகாவத்துக்கு ஷூக்களால் ஆன மாலை ஒன்றை அணிவித்து விட்டார். சில நொடிகளில் சுதாரித்த ஷெகாவத், அதைக் கழற்றி கீழே எறிந்து விட்டு அந்த வாலிபருடன் சண்டையில் ஈடுபட்டார். 

Advertisement

அப்போது எடுக்கப்பட்ட விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.