இந்தியா

ஊழல் புகாருக்கு உள்ளான அமைச்சர்கள்: தகவல்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

DIN


ஊழல் புகாருக்கு உள்ளான மத்திய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது மிகவும் சிக்கலான செயல்முறை என்றும், இதனால் பணியாளர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் காரணம் கூறியுள்ளது.
ஊழல் புகார்களுக்கு உள்ளான மத்திய அமைச்சர்களின் பட்டியலை இந்திய வனத்துறை அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாவது:
மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் சார்ந்த புகார்கள், ஊழல் சாராத புகார்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கற்பனையான புகார்களும், ஆள் அடையாளம் இல்லாதவர்கள் அளித்த புகார்களும் அடங்கும். இந்தப் புகார்களின் உண்மைத்தன்மை குறித்தும், அவற்றுக்கு ஆதாரங்களாக அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் குறித்தும் அவ்வப்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. 
மனுதாரர் ஊழல் சார்ந்த குற்றச்சாட்டுகளை மட்டுமே கோரியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகள் அமைச்சரவைகளின் பல்வேறு துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கண்டறிய மிக அதிக அளவிலான கோப்புகளைத் தேட வேண்டியுள்ளது. அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலான காரியம். மேலும், அவற்றில் பணியாளர்களை ஈடுபடுத்துவது பல்வேறு துறைகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்கும்.எனவே, அலுவலகப் பணிகளைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டியதில்லை என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 7(9)-ன் படி மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறைக்கான இணையமைச்சர் ஹரிபாய் பார்திபாய் செளதரி உள்ளிட்ட பலர் தலையிட முயற்சித்ததாக சிபிஐ மூத்த அதிகாரி எம்.கே. சின்ஹா கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் அலுவலகம் இவ்வாறு பதிலளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT