முகப்பு
இந்தியா

அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டம்: சந்திரசேகர ராவுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

அரசின் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Updated On : 28 நவம்பர், 2018 at 6:19 PM
பகிர்:

அரசின் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை சமீபத்தில் நிசாமாபாத், கரீம்நகர் மற்றும் வாராங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களின் போது இத்தகவலை தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் அரசு சார்பில் 1.32 லட்சம் செலவிடுகிறது. மொத்தம் 820 உண்டு, உறைவிடப் பள்ளிகளில் 3.4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இதை அரசு தன் மீதான பொறுப்புணர்வை தட்டிக் கழிப்பதாக தெலங்கானா ஆசிரியர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.