முகப்பு
இந்தியா

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும்: பினராயி விஜயன்

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 நவம்பர், 2018 at 7:03 PM
பகிர்:

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது இதுகுறித்து விளக்கமளித்தவர் கூறியதாவது,

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் மத்திய பொதுவிநியோக வழங்கல் திட்டத்தின் கீழ் 89,540 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் அப்போதே ரூ.5,616.77 கோடியும், கூடுதல் உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் கோடியும் நிதி கோரி கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், பாதிப்புகளில் இருந்து மறுசீரமைப்புக்காக ரூ.31 ஆயிரம் கோடி குறைந்தபட்ச நிதி தேவைப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.