இந்தியா

முஸ்லிம் பெண்களுக்கு ஓவைஸி சகோதரர்கள் செய்தது என்ன? பாஜக தலைவர் கேள்வி

முஸ்லிம்கள் நலம் குறித்து ஓவைஸி மற்றும் அவரது கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுவதாக பாஜக மூத்த தலைவர் ஸ்வாமி பரிபூரானந்தா தெரிவித்தார். 

ENS

முஸ்லிம்கள் நலம் குறித்து ஓவைஸி மற்றும் அவரது கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுவதாக பாஜக மூத்த தலைவர் ஸ்வாமி பரிபூரானந்தா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செவ்வாய்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

தேர்தலின் போது மட்டும் தான் ஓவைஸி மற்றும் அவரது கட்சியினர் முஸ்லிம்களின் நலன் குறித்து பேசுவார்கள். ஆனால் இதர நேரங்களில் அந்த சமுதாயத்தை முற்றிலும் மறந்துவிடுவார்கள். பேச்சில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்களின் நலனுக்காக அவர்கள் இதுவரை எதைச் சாதித்தார்கள் என்று கூற முடியுமா?

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களை தனது சகோதரர்களாக நடத்துகிறார். முத்தலாக் விவகாரத்தில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளார். ஓவைஸி அதுபோன்ற இந்த முஸ்லிம் பெண்களின் நலனில் ஈடுபட்டுள்ளார். ஓவைஸி கட்சி சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறது. பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் மக்கள் வளர்ச்சிக்காக பாடுபடும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT