இந்தியா

கஜா பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி?: அரசு பரிசீலனை என்று தகவல்

கஜா புயல் பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.     

DIN


சென்னை: கஜா புயல் பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.     

தமிழகத்தை கடந்த 16ந்தேதி தாக்கிய கஜா புயலினால் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும்  நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி  நிதியுதவி கூறியுள்ளது. பின்னர் மத்திய குழு ஒன்று 3 நாட்களாக புயல் பாதித்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தது.   

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.     

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

கஜா புயல் இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்களை விட மிகத் தீவிரமானது, சேதமும் கடுமையானது. ஆனால் கஜா புயல் பாதிப்பை அரசியலாக்க சில எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருவது கண்டிக்கத்தக்கது. 

கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT