இந்தியா

பிகானீர் நில ஆக்கிரமிப்பு வழக்கு: ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வத்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் 

ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நில ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வத்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

PTI

புது தில்லி: ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நில ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வத்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினைருக்கு என மகாஜன் துப்பாக்கிச் சுடும் தளம் அமைநதுள்ளது. இந்த தளத்தினை அமைப்பதற்காக தங்கள் நிலத்தினை அளித்தவர்களுக்காக மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தினை ராபர்ட் வத்ராவுக்கு சொந்தமான நிறுவனம் ஆக்கிரமித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநில காவல்துறையில் புகார்கள் செய்யப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நவமபர் 20-ஆம் தேதியன்று அமலாக்கத்துறை வத்ராவுக்கு முதலில் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் தனது வழக்கறிஞர்களை அனுப்பினார்.  

இந்நிலையில் பிகானீரில் நில ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராபர்ட் வத்ராவுக்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.  

டிசம்பர் முதல் வாரம் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT