முகப்பு
இந்தியா

தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்  

தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான முஹம்மது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா

தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்  

தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான முஹம்மது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

புது தில்லி: தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான முஹம்மது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள்  தலைவர் முஹம்மது அசாருதீன். ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான இவரது கிரிக்கெட் வாழ்க்கை 2000-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டை புரட்டிப் போட்ட கிரிக்கெட் சூதாட்ட ஊழுலுடன் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது ஆனால் பின்னர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு அவர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையானது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கியது. 

இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 2009-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நாடாளுமன்றத் தொகுதிக்குத் தேர்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முஹம்மது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான அசோக் கெலாட் விடுத்துள்ள அறிக்கையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முஹம்மது அசாருதீன் நியமிக்கப்பட்டதை காங்கிரஸ் தலைவர் அங்கீகாரத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுபோலவே தெலங்கானா  பிரதேச காங்கிரசுக்கு இரண்டு துணைத் தலைவர்கள், எட்டு பொதுச் செயலாளர்கள் மற்றும் நான்கு செயலாளர்கள் நியமனத்திற்கும் ராகுல் ஒப்புதல்   அளித்துள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →