இந்தியா

ஓபியம் போதைச் செடி வளர்க்க அரசு அனுமதி வழங்க வேண்டும்: நவ்ஜோத் சிங் சித்து

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, ஓபியம் போதைச் செடி வளர்ப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ANI

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, ஓபியம் போதைச் செடி வளர்ப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பாடியாலா தொகுதி எம்பி தரம்வீர் காந்தி, ஓபியம் போதைச் செடி வளர்ப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, இக்கருத்துக்கு ஆதரவும், வரவேற்பும் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தரம்வீர் காந்தி மிகச் சரியான காரியத்தைச் செய்துள்ளார். எனவே நான் அவருக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். எனது உறவினர் ஓபியம் வகை போதைச் செடியை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி வந்தார். இதனால் நீண்ட ஆயுளுடன் இருந்தார். எனவே பஞ்சாப் மாநிலத்தில் ஓபியம் போதைச் செடி வளர்க்க அரசு அனுமதி வழங்க வேண்டும். இது ஹெராயினை விட மிகச் சிறந்தது என்றார். 

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் பெருகி வரும் போதைப் பயன்பாட்டை அழிக்கும் நோக்கத்தோடு, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் அம்மாநில முதல்வர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவது  குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இரவின் ஒளி நீ... ஜான்வி கபூர்!

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு: இபிஎஸ் கண்டனம்

அகிலம் அதிருதா... தலைவர் 173 அறிவிப்பு - விடியோ!

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர்: ராகுல் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT