முகப்பு
இந்தியா

தில்லியில் இன்று ராணுவ தளபதிகள் மாநாடு தொடக்கம்

தில்லியில் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை (அக்.9) தொடங்கவுள்ளது.

Updated On : 9 அக்டோபர் 2018, 1:21 am IST
பகிர்:


தில்லியில் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை (அக்.9) தொடங்கவுள்ளது.
தில்லியில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ராணுவ நடவடிக்கைகள், நிர்வாகம், மனிதவளங்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவத்தை தயார்படுத்துவது குறித்து தாங்கள் நடத்திய 4 வகையான ஆய்வுகள் குறித்து ராணுவ தளபதிகள் விளக்கமளிக்கவுள்ளனர். ராணுவத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
ராணுவ தலைமை தளபதி விபின் ராவத்தும், மூத்த தளபதிகளும் கடந்த மாதம் ராணுவத்தை துடிப்பான அமைப்பாக மாற்றுவது குறித்தும், சீர்திருத்தம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் தொடர்ச்சியாகவே, இந்த மாநாடு நடைபெறுவதாக தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.