ஜம்மு உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவில் 65 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்முவில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்முவில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சுமூகமாக நடைபெற்ற தேர்தலுக்காக வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் ஜம்மு மாவட்ட தேர்தல் அலுவலர் ரமேஷ் குமார் பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
"154 வார்டுகளில், 153 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 742 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஒருவர் முன்னதாகவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஜம்மு நகராட்சியில் அதிகபட்சமாக 447 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்கு 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், பிஷான் - 85.15 சதவீதம், அர்னியா - 79 சதவீதம், எஸ் புரா - 80.54 சதவீதம், கோமான்ஹாசன் - 86 சதவீதம், அக்நூர் 81 சதவீதம், ஜோரியா 89 சதவீதம் மற்றும் கோர் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயங்ந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 600 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின் போது பெரிதளவுப பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. 5 இயந்திரங்களில் மட்டும் குறைபாடுகள் இருந்தன. ஆனால், வாக்குப்பதிவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக அவை உடனடியாக மாற்றப்பட்டன" என்றார்.