இந்தியா

தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம்

DIN

குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் செவ்வாய்கிழமை ரூ.50 கோடி அபராதம் விதித்தது.

இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் விசாரணை மேற்கொண்டார். அதில், குடியிருப்புப் பகுதிகளில் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கி வந்த தொழிற்சாலைகளுக்கு எதிராக தில்லி அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரூ.50 கோடி அபராதம் விதித்தார். 

மேலும் தில்லி மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அந்த தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அந்த தொழிற்சாலைகளால் யமுனா நதி மாசுபடுவதாகவும் எச்சரித்தார். இவ்விவகாரங்களில் தில்லி அரசின் மெத்தனப்போக்கு காரணமாக இயற்கை தொடர்ந்து பாதிக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்த புகார்தாரர் குற்றம்சாட்டினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT