இந்தியா

திஹார் சிறைக் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: 52 தமிழக போலீஸார் மீது சிபிஐ வழக்கு

DIN

திஹார் சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 52 போலீஸார் மீது சிபிஐ செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

தில்லியில் உள்ள திஹார் சிறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலவரம் ஏற்பட்டது. அப்போது காஷ்மீரைச் சேர்ந்த 18 உயர் பாதுகாப்பு கைதிகள் மீது தமிழக போலீஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த சூழலில், சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட தமிழக போலீஸார் 52 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பாதுகாப்புப் பணியின் போது கைதிகள் தாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழக போலீஸாரும் திஹார் சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT