இந்தியா

நான்காவது காலாண்டில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்வு 

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் தொடர்புடைய திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

DIN

புது தில்லி: அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் தொடர்புடைய திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

2018-2019-ம் ஆண்டின் அக்டோபர் 1ந்தேதி முதல் டிசம்பர் 31ந்தேதி வரையிலான நான்காவது காலாண்டிற்கான பொது சேமநல நிதி (வருங்கால வைப்பு நிதி) மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிதிகளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக இருக்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வட்டி விகிதமானது மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் வருங்கால வைப்பு நிதிகளுக்கு அமலாகும்.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்த வட்டி விகிதமானது 7.6 ஆக இருந்தது.  
  
வங்கிகளில் பணம் வைப்புக்கான வட்டி விகிதம் உயர்ந்த நிலையில் அதற்கேற்ப நடப்புக் காலாண்டிற்கு இந்த உயர்வு அறிவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு வார விழாவில் ரூ.110.9 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்!

ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி மாணவா் கைது

காலிறுதியில் அா்ஜுன் எரிகைசி, டைபிரேக்கரில் ஹரிகிருஷ்ணா

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி நவ.19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT