இந்தியா

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி: மெஹுல் சோக்‌ஸியின் ரூ.218 கோடி சொத்து முடக்கம்

DIN

புது தில்லி: பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் மெஹுல் சோக்ஸியின் ரூ.218 கோடி சொத்துகளை  அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது நெருங்கிய உறவினரான மெஹுல் சோக்ஸி ஆகிய இருவரும், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து விட்டு, இந்தியாவை விட்டு தப்பிச்ச சென்று விட்டனர்,. 

இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் மெஹுல் சோக்ஸியின் ரூ.218 கோடி சொத்துகளை  அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 
 
பி.எம்.எல்.ஏ. சட்டத்தின் கீழ் அவர்கள் இருவருக்குச் சொந்தமான வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT