இந்தியா

டிட்லி புயல் பாதிப்பு: ரூ.1000 கோடி உடனடி நிவாரணம் வழங்க ஒடிஸா முதல்வர் கோரிக்கை

DIN


ஒடிஸா மாநிலத்தில் அண்மையில் டிட்லி புயலால் 17 மாவட்டங்களில் மொத்தம் ரூ.2,765 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 60.11லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 
மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளை மேற்கொள்ள உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளது.
டிட்லி புயல் தாக்கத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், உள் கட்டமைப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. 
இந்த இயற்கை பேரிடரில் சிக்கி மாநிலத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: டிட்லி புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளும், பின்விளைவுகளும் மாநிலத்தை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்துள்ளன. பாதிப்புகளில் இருந்து மீள உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும். புயல் சேதம் காரணமாக மாநிலத்தில் 53,131 வீடுகள் சேதமடைந்துள்ளதால், அவற்றிற்கு மாற்றாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பசுமை வீடுகளை கட்டித்தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
ஏற்கனவே முதற்கட்ட குறிப்பாணையில், ரூ.2770.28 கோடி நிதி தேவைப்படுவதாக கோரப்பட்டிருந்தது. 
இத்தொகையில், ரூ.2014.09 கோடியை மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்தும், மீதமுள்ள தொகையை 2018-19ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்தும் வழங்கப்பட உள்ளது. 
மேலும், ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரண உதவிகளும், தனியார் மற்றும் பொது உடமைகள் சேதத்தையும் மதிப்பிட்டு அதற்குரிய நிவாரணத்தொகையும் வழங்கப்படவேண்டும். இதுவரை மாநிலத்தில் 2.73 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்தகடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT