கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

DIN

தெற்கு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் இடத்தை ஜம்மு காஷ்மீர் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் 2 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். இதையடுத்து, அருகே குடியிருப்பில் இருந்த பொதுமக்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கிருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.  

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணம் கருதி அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிஎஸ்என்எல் உட்பட செல்ஃபோன் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

SCROLL FOR NEXT