இந்தியா

2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார்: சொன்னது?

ENS


புது தில்லி: வரும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட மாட்டார் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று நாங்கள் எப்போதுமே கூறியதில்லை. சில காங்கிரஸ் கட்சியினர் அவ்வாறு பேசும் போதெல்லாம், கட்சித் தலைமை தலையிட்டு அதுபோன்ற பேச்சுக்களை தடுத்துவிடும். எங்களது தேவையெல்லாம் பாஜக வீழ்த்தப்பட வேண்டும். அந்த இடத்தில் மாற்று அரசு, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும், தனி நபர்களின் சுதந்திரத்தை மதிக்கும், வரி விதிப்பில் தீவிரம் காட்டாத, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பை அளிக்கும், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் அரசு அமைய வேண்டும் என்பதே நோக்கம் என்று சிதம்பரம் தெரிவித்தார்.

முதலில் கூட்டணி அமைய வேண்டும், தேர்தலுக்குப் பிறகே கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் சிதம்பரம் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT