இந்தியா

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

DIN

புது தில்லி: ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞரான  ராகேஷ் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்தாவது:

ஆணின் திருமண வயது என்பது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வாக்குரிமையைச் செலுத்தவும், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சேரவும் குறைந்த பட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, திருமணத்திற்கு மட்டும் ஏன் 21 ஆகி இருக்க வேண்டும்? எனவே ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது இதுதொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரிக்கலாம்; ஆனால் இதை பொதுநல வழக்காக தாக்கல் செய்வது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், ராகேஷ் பாண்டேவுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT