இந்தியா

ஊடுருவல்காரர்களின் உடல்களைப் பெற்றுச் செல்லுமாறு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் அழைப்பு

DIN


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுந்தெர்பானி என்ற இடத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பேரை இந்திய ராணுவம்  நேற்று சுட்டுக் கொன்றது.

பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் உடல்களைப் பெற்றுச் செல்லுமாறு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய ராணுவம் கூறுவது என்னவென்றால், சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ வீரர் என்றும், பயங்கரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற மற்றொருவரும் அடங்குவர் என்று கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT