இந்தியா

நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

DIN

புது தில்லி: நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் ரேபரேலி, பஞ்சாபில் பதிண்டா, அசாமில் கெளஹாட்டி, ஹிமாச்சலப்பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் ஜார்கண்ட்டின் தியோஹா ஆகிய ஆறு இடங்களில் அமைந்துள்ள எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள்  புதிதாக உருவாக்கப்பட உள்ளன. 

இந்த பதவிக்கு அடிப்படைச் சம்பளமாக ரூ.2.25 லட்சம் வழங்கப்படும். இயக்குநரே அக்கிளையின்  ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் பொறுப்பாளராக இருப்பார். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT