இந்தியா

ராகுல் காந்தி என்ன கோத்திரம்?: பாரதிய ஜனதா கேள்வியால் சர்ச்சை 

ராகுல் காந்தி என்ன கோத்திரம்? என்று பாரதிய ஜனதா எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. 

ANI


இந்தூர்: ராகுல் காந்தி என்ன கோத்திரம்? என்று பாரதிய ஜனதா எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. 

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது உஜ்ஜயினியில் இருக்கிறார். 

திங்களன்று காலை அங்குள்ள புகழ்பெற்ற மஹாகாளேஸ்வர் கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார். அப்போது அவர் பூணூல் அணிந்திருந்தது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. 

இந்நிலையில் ராகுல் காந்தி என்ன கோத்திரம்? என்று பாரதிய ஜனதா எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. 

இந்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவின் செய்தித் தொடர்பாளார் சம்பிட் பத்ரா இதுகுறித்து பேசும்போது, 'மஹாகாளேஸ்வர் கோவிலுக்குச் சென்றபோது ராகுல் பூணூல் அணிந்திருந்தார் என்றால் அது என்ன வகையான பூணூல்? அவர் என்ன கோத்திரம்?"  என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

காலையில் ராகுல் பூணூல் அணிந்து சென்றதும், அதைத் தொடர்ந்து பாஜகவின் இந்த கேள்வியும் புதிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT