இந்தியா

போலி வெடிகுண்டு, பொம்மைத் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த திருடன்: வசமாக சிக்கியது எப்படி?

பல நகைச்சுவைப் படங்களில் இந்த காட்சியை நாம் பார்த்து சிரித்திருப்போம். ஆனால் அதையே ஒரு நாள் செய்தியாகப் படிப்போம் என்று நினைத்திருக்க மாட்டோம்.

ENS


ஹைதராபாத்: பல நகைச்சுவைப் படங்களில் இந்த காட்சியை நாம் பார்த்து சிரித்திருப்போம். ஆனால் அதையே ஒரு நாள் செய்தியாகப் படிப்போம் என்று நினைத்திருக்க மாட்டோம்.

ஆந்திர மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டு, ஆசிட் பாட்டிலுடன்  மணிகொண்டாவில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக்குள் நேற்று காலை நுழைந்தார் ஒருவர்.

தான் வைத்திருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் உண்மை என்பது போலவே மிகத் திறமையாக நடித்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டியபடி, வங்கிக்குள் கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வந்த திருடனை அங்கேயிருந்த வாடிக்கையாளர்கள் வெகு சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் டேவிட் பிரவீன் என்பதும், பிபீஓ நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவருக்கு 4 மாதங்களுக்கு முன் வேலை பறிபோனதும் தெரிய வந்துள்ளது. அந்த வங்கியில் பிரவீன் வங்கிக் கணக்கு வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்க பணம் தேவைப்பட்ட நிலையில், பிரவீன் வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி தற்போது காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

துப்பாக்கி முனையில் காசாளரிடம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வரும்போதுதான், வாடிக்கையாளர்கள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து வங்கிப் பணம் ரூ.2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT