இந்தியா

ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல் 

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

DIN

புது தில்லி: அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் விசாரிக்க முடியும் என்று கூறி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒத்தி வைத்தது. 

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், 'அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட மத்திய அரசு முதலில் நிலத்தினைக் கையகப்படுத்த வேண்டும். பின்னர் அதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக நாகபுரியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று பேசியிருந்தார். 

அதேபோல் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கோரிக்கையையே முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சித்துறை திட்டப் பணிகள் ஆய்வு

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் மகளிா்களுக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

SCROLL FOR NEXT