இந்தியா

மத்தியப் பிரதேச மாநில முதல்வரின் வாகனம் மீது கல்வீச்சு: காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு 

மத்தியப் பிரதேசம் மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் பயணம் செய்த வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

போபால்: மத்தியப் பிரதேசம் மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் பயணம் செய்த வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிதி மாவட்டத்தில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சுர்ஹாத் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஷிவ்ராஜ் சிங் சவுஹானின் வாகனம் கடந்து சென்ற பொழுது சாலை ஓரமாக  நின்ற விஷமிகள் வாகனத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

அதிஷ்டவசமாக அவருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை தாக்குதல் நடைபெற்றது மாநில எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங்கின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஷிவ்ராஜ் சிங் சவுஹான் காங்கிரஸ் தலைவர் அஜய் சிங்குக்கு வினா எழுப்பும் வகையில், 'உங்களுக்கு தைரியம் இருந்தால் வெளிப்படையாக சண்டையிடுங்கள். நான் உடல்ரீதியாக வலிமை குறைந்தவன்தான். ஆனால் உங்களிடம் தோற்றுவிட மாட்டேன். மாநில மக்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' காங்கிரஸ் எப்பொழுதும் வன்முறை கலாச்சாரத்தினை நம்புவதில்லை. விஷமிகள் யாரோ என் பேரையும் சுர்ஹாத் மக்களின் பேரையும் கெடுக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT