இந்தியா

என் குழந்தையுடன் சேர்த்து வையுங்கள்: சுஷ்மா சுவராஜுக்கு ஒரு தாயின் உருக்கமான வேண்டுகோள் 

ANI

ஹைதாராபாத்: பிரிக்கப்பட்டுள்ள குழந்தையுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு ஹைதாராபாத் பெண்ணொருவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அந்தப் பெண் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இருந்து தெரிய வருவதாவது 

ஹைதாராபாத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண்ணுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு துபாய் சென்று வசிக்கத் துவங்கிய அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெண்ணை அவரது கணவர் தினமும் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் வரை இந்த சித்திரவதைகள் தொடந்துள்ளது. பின்னர் சிறிதுநாளில் அவரது கணவரின் உடன்பிறந்தவர்கள் அந்த பெண்ணிடமும், அவளது தந்தையிடமும் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பெண்ணை மட்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். குழ்நதை அவர்களுடன் துபாயில் உள்ளது

இந்நிலையில் ஹைதராபாத் திரும்பி ஒருமாதம் கழிந்த பின்னர் அப்பெண் சரூர் நகர் பகுதி காவல் நிலையத்தில், தனது கணவர் மீது தன்னை ஏமாற்றியதாகவும், துன்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார்.

பின்னர்தான் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்டு துபாயில் உள்ள குழந்தையுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு அந்த பெண், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தற்போது  உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT