இந்தியா

கொல்கத்தா பாக்ரி மார்கெட்டில் பயங்கர தீ விபத்து

DIN

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள பாக்ரி மார்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு தீயணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:45 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி தெரிவித்தார்.

இந்த தீ விபத்து காரணமாக எம்.ஜி.சாலை, பாடர் நீதிமன்றம், ரவீந்திர சாரனி, கேனிங் சாலை, பார்போர்ன் சாலை ஆகியவை போக்குவரத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொல்கத்தா மேயரும் சம்பந்தப்பட்ட இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். இதுவரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் நிகழவில்லை. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவது நம் கைகளில் இல்லை. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT