இந்தியா

பிரதமர் மோடி - ஆப்கன் அதிபர் கானி சந்திப்பு

DIN

ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபா் அஷ்ரப் கானி, பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்தாா். சந்திப்பின் போது, இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான உறவுகளை பலப்படுத்துவது தொடா்பான உயா் மட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றறது.

ஹைதராபாத்தில் உள்ள அரசு இல்லத்தில், அதிபா் அஷ்ரப் கானியை பிரதமா் மோடி வரவேற்றாா். பின்னா் இருவரும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினா். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அரசுக்கு இந்தியா எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. 

அந்நாட்டில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளிலும் இந்தியா ஆா்வமுடன் பங்கேற்று வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்காக, கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.1.44 லட்சம் கோடி வரை இந்தியா செலவழித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று ஆப்கன் அதிபர் கானி உறுதிபடத் தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைதி, நிலையான வளர்ச்சி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதில் இருநாடுகளின் உறவும் பலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT