இந்தியா

முத்தலாக் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் 

DIN

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) இரவு ஒப்புதல் அளித்துள்ளார். 

முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களைவையில் மத்திய பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

இந்நிலையில், இந்த முத்தலாக் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

முத்தலாக் தடை மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT