இந்தியா

ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ள குமாரசாமியின் குடும்பம்: எடியூரப்பா 'பகீர்' புகார் 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

ENS

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சருமான மஞ்சு சமீபத்தில் ஹாசன் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் அம்மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் கூறியிருந்தார். அத்துடன் இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாஜக சார்பாக மாநிலம்  தழுவிய போராட்டங்கள் நடைபெறும் என்று எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் உள்ள பேலஸ் மைதானத்தில் புதனன்று நடைபெற்ற மாநில பாஜகவின் சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

ஹாசன் மாவட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ஆக்கிரமித்துள்ள நிலத்தின் மதிப்பு ரூ. 3000 கோடி ஆகும். இந்தக் குற்றசாட்டு தொடர்பாக குமாரசாமி வாய் திறந்து எதுவும் சொல்லாத காரணத்தால், பொதுப்பணித்துறை அமைச்சரான ரேவண்ணா இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்.   

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT