இந்தியா

தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டியிட வேண்டும்: ராஜஸ்தானில் ராகுல் பிரசாரம்

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரைவத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், தீவிர தெருமுனைப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து ஆகஸ்டு 11-ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 

இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்துக்கு 2-ஆவது முறையாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சக்வாரா எனுமிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:

வரும் காலங்களில் தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டியிட வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பெண்களின்றி எதுவும் நடக்காது. மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதிகளிவிலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 

நாம் பயன்படுத்தும் மொபைல் ஃபோன்களுக்குப் பின்புறம், ராஜஸ்தான் தயாரிப்பு அல்லது துங்கர்பூர் தயாரிப்பு என்ற நிலை உருவாக வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT