இந்தியா

பீம் ஆர்மி நிறுவனர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து

DIN


பீம் ஆர்மி' நிறுவனர் சந்திரசேகர ஆஸாத் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சஹாரன்பூரில் இரு ஜாதியினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸாத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு கடந்த 14-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
முன்னதாக, தன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஆஸாத் வழக்குத் தொடுத்திருந்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆஸாத் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மாநில அரசு ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது' என்றார். இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்ததாக நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மகாராணா பிரதாப் சிங் ஜெயந்தி விழா ஊர்வலம் நடைபெற்றபோது, இரு ஜாதியினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 
இந்தச் சம்பவத்தில் வன்முறையைத் தூண்டியதாக தலித் தலைவரான ஆஸாத் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT