இந்தியா

ராணுவ வீரர்களின் ரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை - ரஃபேல் விவகாரத்தில் ராகுல் தாக்கு

DIN

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், ராணுவ வீரர்களின் ரத்தத்திற்கு அவமரியாதை செய்துவிட்டதாகவும் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினார். 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் கைகோர்த்ததில் அரசின் தலையீடு இல்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. 

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரைத்ததாக முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ரஃபேல் ஒப்பந்தத்தில் ஃபிரான்கோய்ஸ் கருத்தும், பாஜக மறுப்பும் முற்றிலும் முரணாக இருப்பது இந்த ஒப்பந்தத்தில் உள்ள சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டுகையில், 

"ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி மாற்றம் செய்துள்ளார். நூறு கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை திவாலான நிலையில் உள்ள அனில் அம்பானிக்கு பிரதமர் வழங்கியிருப்பது தற்போது நமக்கு தெரியவந்துள்ளது. ஃபிரான்கோய்ஸ் ஹோலன்டுக்கு நன்றி.

இந்தியாவுக்கு பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்திற்கு அவர் அவமரியாதை செய்துவிட்டார்" என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT