இந்தியா

இந்தியா-அமெரிக்கா உறவு கடந்த 20 ஆண்டுகளில் ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது: நவ்தேஜ் சர்னா

DIN


இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு கடந்த 20 ஆண்டுகளில் ஆக்கப்பூர்வமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா வெள்ளிக்கிழமை கூறினார்.
நியூயார்க்கில் ஆசியா சொசைட்டி சார்பாக ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா செப்டம்பர் 19-21 வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நவ்தேஜ், இந்தியா- அமெரிக்கா உறவு குறித்து பேசியதாவது:
பாதுகாப்பு, அரசியல், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, பொருளாதாரக் கொள்கை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியவைதான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முக்கியமானவை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும், அமெரிக்காவும் தனித்திருந்தன. 
ஆனால் தற்போது இந்த 20 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நேர்மறையாக வளர்ச்சியடைந்துள்ளது. இரு நாடுகளின் கலாசாரங்கள் வேறுபட்டவை என்பதை தவிர வேறு குறை எதுவும் இல்லை என்று அவர் பேசினார்.
இந்தியாவின் கலை மற்றும் கலாசாரத்தை தெரியப்படுத்தும் வகையில், சீசன் ஆப் இந்தியா' என்னும் நிகழ்ச்சி செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா முதல்முறையாக கொண்டாடப்பட்டது. அதில் உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT