இந்தியா

ரஃபேல்: உண்மைகளை மக்களிடம் எடுத்துரைப்போம்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், காங்கிரஸின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் நாடு முழுவதும் சென்று மக்களிடம் உண்மைகளை எடுத்துரைப்போம்

DIN


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், காங்கிரஸின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் நாடு முழுவதும் சென்று மக்களிடம் உண்மைகளை எடுத்துரைப்போம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நானும், இதர அமைச்சர்களும் நாடு முழுவதும் சென்று, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை மக்களிடத்தில் எடுத்துரைப்போம். 
இந்த விவகாரத்தில் கருத்துரீதியிலான போரை மத்திய அரசு முன்னெடுக்கும் என்றார்.
மேலும், பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் திறனை மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான பணிகள் அளிக்கப்பட்டன. ஆனால், தற்போதோ ஆண்டுக்கு ரூ.22,000 கோடி மதிப்பிலான பணிகள் அளிக்கப்படுகின்றன என்றார் நிர்மலா சீதாராமன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT