குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் ஜி. சத்யனுக்கு அர்ஜுனா விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
இந்தியா

தமிழக வீரர் சத்யனுக்கு அர்ஜுனா விருது

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யனுக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

DIN


தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யனுக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார். அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்த 1993-இல் பிறந்த ஜி.சத்யன், உலக தரவரிசையில் 40-ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 2011-இல் உலக ஜூனியர் சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் சத்யனும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2016-இல் பெல்ஜியம் ஓபன் போட்டி, பல்வேறு ஐடிடிஎஃப் போட்டிகளில் பட்டம் வென்றுள்ள சத்யன், கோல்ட்கோல்ட் காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார்.
தற்போது ஜெர்மனியின் தலைசிறந்த கிளப்புகளில் ஒன்றான ஏஎஸ்வி ரன்வெட்டர்பேட்ச் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சீனிவாச ராவ் (பயிற்சியாளர்): துரோணாச்சார்யா விருது பெற்றுள்ள சீனிவாசராவ் ஆந்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழகத்தில் குடியேறிவிட்டார். கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் டேபிள்டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ள இவர், பிரபல வீரர் சரத்கமலின் தந்தை ஆவார். 
இவரது கடுமையான பயிற்சியின் கீழ் சேதன் பபூர், எஸ்.ராமன், கே.ஷாமினி, என்.ஆர்.இந்து உள்ளிட்ட பிரபல வீரர், வீராங்கனைகள் சாம்பியன்களாக உருவாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT