முகப்பு
இந்தியா

நமோ டிவி தொடங்க அனுமதி அளித்தது எப்படி? தேர்தல் ஆணையம் கேட்கிறது

மக்களவைத் தேர்தல் நேரத்தில் நமோ டிவியை உடனடியாகத் தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா

நமோ டிவி தொடங்க அனுமதி அளித்தது எப்படி? தேர்தல் ஆணையம் கேட்கிறது

மக்களவைத் தேர்தல் நேரத்தில் நமோ டிவியை உடனடியாகத் தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:


புது தில்லி: மக்களவைத் தேர்தல் நேரத்தில் நமோ டிவியை உடனடியாகத் தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக அண்மையில் தொடங்கப்பட்ட "நமோ" தொலைக்காட்சி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதோடு, கடந்த மார்ச் 31ம் தேதி நானும் கூட காவலன்தான் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேரலை செய்தது குறித்து தூர்தர்ஷனுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தொடங்கப்பட்ட நமோ தொலைக்காட்சியின் லச்சிணையில் (லோகோ) பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உள்ளது. அவரது தேர்தல் பிரசாரங்களை அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்க சம்பந்தப்பட்ட கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதா? அப்படி அனுமதி பெறாமல் அந்தக் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். பணம், ஆள் பலத்தைக் கட்டுப்படுத்தும் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சமமான வாய்ப்புகளைத் தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போதுதான் வாக்காளர்களை அனைவராலும் சமமாக அணுக முடியும். ஆனால், இதற்கு எதிராக, பாஜக 24 மணி நேர நமோ தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது என்று ஆம் ஆத்மி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →