இந்தியா

கூகுள் விளம்பரங்களுக்காக அதிகம் செலவிட்டதில் பாஜக தான் நம்பர் -1

DIN


கூகுள் மற்றும் அதன் இணைவு பெற்ற நிறுவனங்களான யூடியூப் போன்ற தளங்களில் விளம்பரங்களுக்காக அதிக செலவிட்டதில் பாஜக ரூ. 1.21 கோடி செலவிட்டு முதலிடத்தில் உள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூகுள் மற்றும் அதன் இணைவு பெற்ற நிறுவனங்களில் வெளியான அரசியல் விளம்பரங்கள் குறித்து கூகுள் நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரையிலான விளம்பரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.  

அதன்படி, இந்த காலகட்டத்தில் பாஜக 554 விளம்பரங்களுக்காக ரூ. 1.21 கோடி செலவிட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, 107 விளம்பரங்களுக்காக ரூ. 1.04 கோடி செலவிட்டுள்ளது.  

அதே சமயம் தெலுங்கு தேசம் கட்சியை பிரபலப்படுத்துவதற்காக ரூ. 1.48 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அக்கட்சிக்காக பிரமன்யா நிறுவனம் ரூ. 85.25 லட்சமும், டிஜிட்டல் கன்சல்டிங் நிறுவனம் ரூ. 63.43 லட்சமும் செலவிட்டுள்ளது. 

ஆனால், எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் கட்சி 14 விளம்பரங்களுக்காக வெறும் ரூ. 54,100 மட்டுமே செலவிட்டுள்ளது.    

தேர்தல் விளம்பரங்களுக்காக அதிக தொகை செலவிட்ட மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் ரூ. 1.73 கோடி செலவிட்டு முதலிடத்தில் உள்ளது. தெலங்கானா மாநிலம் ரூ. 72 லட்சம் செலவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் ரூ. 18 லட்சம், மகாராஷ்டிரா ரூ. 17 லட்சம் செலவிட்டுள்ளன. 

பேஸ்புக்கிலும் விளம்பரங்களுக்காக அதிக தொகை செலவிட்ட கட்சிகளில் பாஜக தான் முதலிடம். பேஸ்புக்கில் கடந்த மாதம் வரை விளம்பரங்களுக்காக மொத்தம் ரூ. 10 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதில் ரூ. 5 கோடி வரை பாஜக மற்றும் அது சார்ந்த அமைப்புகளே செலவிட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT