இந்தியா

வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தொகுதியை விற்பவர்தான் மாயாவதி: மேனகா காந்தி பகீர் புகார்

உத்தரப்பிரதேசம் சுல்தான்புர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.

PTI


சுல்தான்புர்: உத்தரப்பிரதேசம் சுல்தான்புர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.

சுல்தான்புரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேனகா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களிடம் ரூ.15 முதல் 20 கோடி பணம் வாங்கிக் கொண்டுதான் மாயாவதி அவர்களுக்கு தொகுதியே ஒதுக்குவார்  என்று தெரிவித்துள்ளார்.

தொகுதிகளை பணத்துக்கு மாயாவதி விற்பதை அனைவரும் அறிவர். அவ்வளவு ஏன், இதனை அக்கட்சியினரே பெருமையோடு கூறவும் செய்வார்கள். 

ஒரு தொகுதிக்காக ரூ.15 - 20 லட்சம் வரை வேட்பாளர்கள் வழங்க வேண்டும் என்றால், அந்த பணத்தை அவர்கள் மக்களிடம் இருந்துதான் பிடுங்குவார்கள் என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT