இந்தியா

ராகுல் காந்தியின் கடன், சொத்து எவ்வளவு? கடனா.. ஆமாங்க இருக்காமே!

DIN

வயநாடு: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு தற்போது எவ்வளவு தெரியுமா? வெறும் 15.88 கோடிதான். வயநாடு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ராகுல் காந்தி அதில் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்த சொத்து மதிப்பை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் ராகுலின் சொத்து மதிப்பு ரூ.9.4 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வயநாடு தொகுதியில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் தனது சொத்து மதிப்பு குறித்து கூறியிருப்பதாவது, ராகுல் பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.72 லட்சம் அளவுக்கு கடன் நிலுவையில் உள்ளது.

ரூ.5,80,58,799 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.10,08,18,284 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன. மொத்தமாக ராகுலுக்கு ரூ.15,88,77,083 கோடி சொத்துகள் உள்ளன.

அமேதி தொகுதியிலும் போட்டியிடும் ராகுல் காந்தியின் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையில் ரூ.40 ஆயிரம் கையிருப்பு ரொக்கம், ரூ.17.93 லட்சம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கும் ராகுலுக்கு சொந்தமாக 333.3 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரவித்துள்ளார். அவருக்கு 2017 - 18ம் நிதியாண்டில் வந்த வருமானம் ரூ.1,11,85,570 என்று பதிவு செய்துள்ளார். அவருக்கு வருமானமாக எம்பி ஊதியம், ராயல்டி, வாடகை, பாண்டுகளுக்கான வட்டி, வங்கி முதலீடுக்கான வட்டி போன்றவற்றை பதிவு செய்துள்ளார்.

டிரிடினி கல்லூரியில் எம்.பில் முடித்திருப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT