இந்தியா

இந்திரா, ராஜீவ் ஆகியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்: பாஜக மீது பிரியங்கா வதேரா அடுக்கடுக்கான விமர்சனம்

இந்திரா, ராஜீவ் ஆகியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா குறிப்பிட்டுள்ளார். 

DIN

இந்திரா, ராஜீவ் ஆகியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் சனிக்கிழமை நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

தேர்தல் வந்தால் மட்டுமே இங்கு சிலருக்கு தேசபக்தியும் வருகிறது. ஆனால், அவர்கள் இந்த நாட்டுக்காக செய்தது என்ன? வேலைவாய்ப்பு எங்கே? விவசாயிகளின் நலன் எங்கே? பெண்களின் பாதுகாப்பு எங்கே? 

தேர்ந்தெடுத்த தேசப்பற்று வேண்டாம். பாஜக-வினர் உண்மையிலேயே தேசபக்தி கொண்டவர்கள் என்றால் முன்னாள் பிரதமர்கள் இந்திரா மற்றும் ராஜீவ் ஆகியோரையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஹிந்து, முஸ்லிம் மட்டுமல்லாது எதிர்கட்சித் தலைவரின் தந்தை என நாட்டுக்காக சேவையாற்றிய அனைவரையும் பாகுபாடு இல்லாமல் மதிக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கறுப்பு பணத்தை மீட்டு வருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். அந்த கறுப்பு பணம் எங்கே? இதுவரை ஒரு பைசாவை கூட கண்ணில் காட்டவில்லை. 

இந்த தேர்தல் மிக முக்கியமானது. ஏனென்றால் இது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசின் செயல்பாடுகள் நாம் அனைவரும் நன்கு அறிந்ததுதான். எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என்று பாஜக-வை கடுமையாக விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 தொடரை வென்றது இலங்கை!

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

நாளை குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமா் இன்று விருந்து

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

SCROLL FOR NEXT