இந்தியா

அத்வானி, ஜோஷியுடன் அமித் ஷா சந்திப்பு!

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். 

ANI

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள அவர்களது இல்லங்களில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

வருகிற மக்களவைத் தேர்தலில் இவ்விரு மூத்த தலைவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக அத்வானியின் காந்திநகர் தொகுதியில் தற்போது அமித் ஷா களமிறங்கவுள்ளார். அதுபோன்று கடந்த தேர்தலில் மோடிக்காக வாராணசி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்பவது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வாக்குறுதி திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போதும் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. மேலும், நாடு தான் முக்கியம், கட்சியும், சொந்த நலனும் அடுத்துதான் என சமீபத்தில் அத்வானி கருத்து தெரிவித்தபோது அதை பிரதமர் மோடி வரவேற்று பதிவிட்டிருந்தார். 

ஆனால், இது எதிர்கட்சிகளிடம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT