இந்தியா

மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்குமாறு நிதீஷ் வலியுறுத்தினார்: ராப்ரி தேவி

ANI

மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தியதாக ராப்ரி தேவி தெரிவித்தார். இதுதொடர்பாக பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி, சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

பாஜக-வால் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் நிதீஷ் குமார் மீண்டும் அவர்களுக்கு ஆதரவு தருகிறார். லாலு பிரசாத் யாதவ் எதற்காக சிறை சென்றார்? அவருக்கும் கால்நடைத் தீவன ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், ஏழைகளுக்கு ஆதரவாக இருந்ததால் தான் லாலுவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மகா கூட்டணி முழுமை பெற்றிருந்தால் 400 இடங்கள் வரை கைப்பற்றியிருக்கும். அதேபோன்று தன்னை மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், 2020-ஆம் ஆண்டு எனது மகன் தேஜஸ்வி யாதவை பிகார் முதல்வராக்குவதாக நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரஷாந்த் கிஷோர் சுமார் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT