இந்தியா

அதிமுக விளம்பரத்துக்கு தடை: தேர்தல் ஆணையம்

DIN


தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகும் அதிமுக விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி, நாளிதழ், சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகின்றனர். இதில், அதிமுக திமுகவை விமரிசிக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. அதில், 'ஒரு குடும்ப ஆட்சி' என்று ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. 

இந்த விளம்பரம் குறித்து திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தது. அதாவது, இந்த விளம்பரத்தில் அதிமுகவின் விளம்பரம் திமுக மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறது என்று திமுக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், 

"தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் 'ஒரு குடும்ப ஆட்சி' என்ற அதிமுகவின் விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. அது எந்தவித ஆதாரமும் இல்லாமல் வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்லது தவறாக வழிநடத்தப்படுவதாகும். இந்த விடியோவை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதையும் மீறி ஒளிபரப்பப்பட்டால், கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT