இந்தியா

தேர்தலில் இருமுறை வாக்களிக்க வேண்டுகோள்: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

DIN

தேர்தலில் இருமுறை மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ மந்தா மாத்ரேவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 நவி மும்பையில் உள்ள பேலாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் மந்தா மாத்ரே. நவி மும்பை அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மந்தா மாத்ரே பேசியபோது, மும்பையில் வேலைபார்க்கும் சதாரா பகுதி மக்கள் முதலில் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும், பிறகு திரும்பி வந்து வரும் 29ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தாணே தொகுதி சிவசேனை வேட்பாளருக்கு 2ஆவதாக வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
 தேர்தலில் மக்கள் ஒருமுறை மட்டுமே தங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும். 2ஆவதாக பதியும் வாக்கு, கள்ள வாக்காக கருதப்படும். அவர்கள் மீது இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இருமுறை வாக்களிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ மந்தா மாத்ரே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தைகளை மீறிய குற்றச்சாட்டுகளின்கீழ், மந்தா மாத்ரேவுக்கு எதிராக தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT