இந்தியா

மகளிர் போலீஸாருக்கு மும்பை காவல்நிலையங்களில் சானிடரி நாப்கின் திட்டம்

மகளிர் போலீஸாருக்கு மும்பை காவல்நிலையங்களில் சானிடரி நாப்கின் திட்டத்தை மாநகர துணை ஆணையர் செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார்.

ANI

மகளிர் போலீஸ்களுக்காக மும்பை காவல்நிலையங்களில் சானிடரி நாப்கின் திட்டத்தை மாநகர துணை ஆணையர் செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார்.

மும்பை பெண் காவலர்களின் நலத்திட்டம் தொடர்பாக என்ஜிஓ அமைப்பின் துணையுடன் முதல்கட்டமாக மாநகரம் முழுவதும் உள்ள 93 காவல்நிலையங்களில் 140 சானிடரி நாப்கின் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மும்பை போலீஸ் தரப்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தனது மனைவியுடன் தொடங்கி வைத்த பின்னர் மும்பை மாநகர போலீஸ் துணை ஆய்வாளர் நியதி தக்கர் கூறுகையில்,

மும்பை போலீஸில் மொத்தம் 20 சதவீதம் பெண் காவலர்களால் நிரம்பியுள்ளது. எனவே பணியிடத்தில் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதியாக, மாதவிடாய் காலங்களில் அடிப்படை சுகாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் கடந்த வாரம் காவல் நிலைய தலைமையகத்தில் முதல் சானிடரி நாப்கின் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டது. 

பின்னர் தற்போது மும்பையின் 93 காவல்நிலையங்களுக்கு இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் பெண்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50-ல் சென்னையை சுற்றிப் பார்க்க... ‘சென்னை உலா’ பேருந்து சேவை! இன்றுமுதல்!!

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

SCROLL FOR NEXT