முகப்பு
இந்தியா

மருத்துவமனையில் சசி தரூர்: நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நிர்மலா சீதாராமன்

கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்

Updated On : 16 ஏப்ரல், 2019 at 3:09 PM
பகிர்:


திருவனந்தபுரம்: கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சசி தரூர், நேற்று தலையில் அடிபட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவனந்தபுரத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற நிர்மலா சீதாராமன், சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். இது குறித்த தகவலை சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.